சச்சின்-விராட் இருவரில் யார் சிறந்தவர்? ஷுப்மான் கில் தேர்வு செய்தது யாரை தெரியுமா?

கிரிக்கெட் செய்திகள்: தற்போதைய சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இளம் வீரர் சுப்மன் கில் (Shubman Gill) குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. அவரின் அதிரடியான ஆட்டமும், ரன் குவிக்கும் திறமையும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணிக்காக அபாரமான பேட்டிங் செய்து வருகிறார். தனது பேட் மூலம் ரன்களை பொழிந்து, இந்திய அணிக்காக போட்டியை வெல்வதுடன் மட்டுமில்லாமல், உலகக் கோப்பை கனவையும் காட்டுகிறார். இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுவது, இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்களை கவர்ந்தது யார்?

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கில் மீண்டும் ஒரு சதம் அடித்தார். 78 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்தார். கடந்த 4 சர்வதேச போட்டிகளில் கில் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கில்லை பாராட்டி வருகின்றனர். இந்த போட்டிக்குப் பிறகு, அவரது பேட்டி ஒரு சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதில் சச்சின் மற்றும் கோஹ்லி பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுப்மன் கில் அளித்த பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

சேனலில் ஒளிபரப்பப்பட்ட ஒரு பேட்டியில், சச்சின் மற்றும் விராட் கோலி பற்றி சுப்மான் கில்லிடம் கேட்கப்பட்டபோது, ​​​​” விராட் கோலி என்னை மிகவும் கவர்ந்தார். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, கிரிக்கெட்டை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சிறியவனாக இருந்தேன்” என்று கூறினார். விராட் கோலியைப் பார்த்த பிறகுதான் கிரிக்கெட்டைப் புரிந்துகொண்டேன் என்றாலும், சச்சினைப் பார்த்து தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன் என்றார. எனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் என்றும் கூறினார். 

விராட் கோலி தான் என் ஹீரோ

சச்சின் மற்றும் விராட் கோலி பற்றிய சுப்மன் கில் இந்த கருத்து, “சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தன்னை மிகவும் கவர்ந்துள்ளார். விராட் கோலியை பார்த்து தான் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன் என அவர் கூறுவது, விராட் கோலி தான் அவரின் ஹீரோ என்பதை தெளிவாகக் காட்டுகிறது. மேலும் அவரது தலைமுறையில் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த வீரராக இருந்தார் என்பதால் அவரது வாதமும் சரியானது.

தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய கில்

தற்போது சிறப்பாக பேட்டிங் செய்து வரும் சுப்மன் கில் தனது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவர் கடந்த நான்கு போட்டிகளில் 3 சதங்களை அடித்துள்ளார். தனது குறுகிய பயணத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார். மேலும் அவர் வரவிருக்கும் உலகக் கோப்பை 2023 அணியிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் சுப்மன் கில்லுக்குப் பின்தங்கியுள்ளனர். 

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த ரோஹித் சர்மா

சுப்மன் கில்லின் அற்புதமான இன்னிங்ஸின் காரணமாக, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தது. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு ரோஹித் சர்மாவும் சதம் அடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 6 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்தார்.

சுப்மன் கில் சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் -ரோகித்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு சுப்மான் கில் பற்றி பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “அவர் ஒரு சிறந்த தொடக்க பேட்ஸ்மேன். அவர் தனது குறுகிய ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் இதுவரை செய்தவை என்னை மிகவும் கவர்ந்தன. அவர் ஒவ்வொரு புதிய ஆட்டத்தையும் ஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்கிறார். ஒரு இளம் பேட்ஸ்மேனாக அவர் செய்து வருவது பாராட்டுக்குரியது. தற்போது என்ன செய்வது என்று அவருக்குச் சொல்லத் தேவையில்லை. ஆட்டத்தை நன்றாகக் கணிக்கத் தெரிந்தவர். 

நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -ரோஹித்

தனது சதம் குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இன்று அடித்துள்ள சதத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம். பெரிய இலக்காக இருந்தாலும், இந்த மைதானத்தில் எந்த இலக்கையும் துரத்த முடியும் என்பது எனக்கு தெரியும். அதனால் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.