இப்படி நடந்தால்… ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும்


பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை அதிகரித்தால் அதனால் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்படும்

எதிர்வரும் 2035ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 68 என அதிகரிக்க திட்டமிடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.
இதனால் குறைந்த ஆயுள் விகிதங்கள் கொண்ட பிளாக்பூல், கிளாஸ்கோ மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்படும்.

இப்படி நடந்தால்... ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும் | No State Pension If The Age Rises To 68

@getty

மட்டுமின்றி, 2028ல் ஓய்வூதிய வயது 66ல் இருந்து 67க்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 2046 காலகட்டத்தில் பிறப்பு விகிதமும் வயது வரம்பு மக்கள் தொகையும் சரிவடையும் எனவும், இதனால் மிக குறைவான இளையோர் சமூகமே வரி செலுத்தும் நிலை உருவாகும் எனவும் கூறுகின்றனர்.

2035க்கு முன்னர் ஓய்வூதிய வயதை 68 என அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது 54 அல்லது அதற்கு கீழ் வயதுடையவர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
இந்த விசித்திர முடிவை வேலை மற்றும் ஓய்வூதியத் துறையும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஓய்வூதியம் பெறாமலே இறக்கும் நிலை

மேலும், பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலே இறக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 3.5 மில்லியன் மக்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய வயதுடையவர்கள் ஏற்கனவே வேலையில்லாமல் உள்ளனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி நடந்தால்... ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும் | No State Pension If The Age Rises To 68

@getty

மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சேமிப்பு என்பது 5,000 பவுண்டுகளுக்கும் குறைவாகவே உள்ளது எனவும், 100,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேமிப்பு என்பதே இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டாம் எனவும் தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.