'ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட காரணம் உண்டு' – ஜனாதிபதி திரெளபதி முர்மு

“ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட காரணம் உண்டு,” என, குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்து உள்ளார்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்த இந்தியா, 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு நாடானது. அதன்படி, இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, குடியரசு தினத்திற்கு முந்தைய நாள், மாலையில், குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது வழக்கம். அதன்படி, இன்று மாலை, நாட்டு மக்களிடையே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை ஆற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு தினத்தை கொண்டாடும் போது, ஒரு தேசமாக நாம் எதை அடைந்தோமோ, அதை கொண்டாடுகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்துடன் ஜனநாயக குடியரசாக நாம் வெற்றியடைந்து உள்ளோம். பல்வேறு விதமான மதங்களும், மொழிகளும் நம்மை பிளவுபடுத்தவில்லை, மாறாக ஒன்றிணைத்து உள்ளன. உலகின் மிகச்சிறந்த நாகரிகங்களில் ஒன்று இந்தியா. அம்பேத்கர் உள்ளளிட்ட பல ஆளுமைகள் நமக்கு அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் குறிக்கோளின் படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இது தான் நமது இந்தியாவின் சாரம்சம். நமது நாகரீகம் பழமையானது. நவீன ஜனநாயகம் இளமையானது.

ககன்யான் திட்டம் மூலம் நமது நாடு மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை ஏவ உள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. மதங்களும், மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன. இளம் பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

மத்திய அரசு திட்டங்கள் பல ஏழை எளிய மக்களுக்கு பலன்களை அளிப்பதாக உள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் தொற்று நோய் காலங்களில் ஏழைகளுக்கு நிவாரணம்

வழங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது அரசியல் சாசனம் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலத்தில் என எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறது.

நமது அரசியல் சாசனத்தை பின்பற்றுவது தான் நமது கடமை. நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய அம்பேத்கருக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.அரசியலமைப்பு சட்டம் வந்தநாள் முதல் இன்று வரை ஆச்சர்யத்தை தருகிறது.அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை நம்பிக்கையான தேசியமாக மாற்ற வழிவகுத்தது.

இவ்வாறு உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.