தளபதி 67 அப்டேட்: லோகேஷ் கொடுத்த Hint… படுகுஷியில் விஜய் ரசிகர்கள்

Thalapathy 67 Update: தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த  எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டு வரும் படம் தளபதி 67 படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்பே எக்கசக்க எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்துள்ளது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கடந்த படமான விக்ரம், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று,  மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.

அதேபோன்று விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் வந்த மாஸ்டர் திரைப்படமும் கொரோனாவிற்கு பிறகு மக்களை திரையரங்கம் நோக்கி படை எடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து எடுப்பதால்தான் இத்தகைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாரிசு படம் வெளியான நாளில் இருந்தே தளபதி 67 அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களை அதிர விட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த சூழலில் கோவைக்கு கல்லூரி நிகழ்வில் கலந்துக்கொள்ள வந்தபோது தளபதி 67 என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தற்போது இயக்குனர் லோகேஷ் அளித்த பதில் மீண்டும் சமூக வலைத்தளத்தை புரட்டிப்போட்டுள்ளது என்று சொல்லலாம்.

 இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு படமான மைக்கேல், வரும் பிப். 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது, தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து அவர்,”தளபதி 67 பட அப்டேட்டின் ஹிண்ட் வேண்டுமென்றால் தருகிறேன். பிப். 1, 2, 3 ஆகிய நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அப்டேட் வருகிறது! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” என கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார். தொடர்ந்து, அரங்கில் இருந்த மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பி அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படத்திற்கு பெயர் மற்றும் படத்துக்கு டீசர் ஒன்று ரெடி செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.