நட்சத்திரத்திலும் நாம் கால்பதி்ப்போம்: ஜனாதிபதி குடியரசு தின உரை| G20 presidency is an opportunity to promote democracy&multilateralism & the right forum for shaping a better world & a better future

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாம் நட்சத்திரத்திலும் கால்பதி்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு , குடியரசு தின செய்தி வெளியிட்டு உரையாற்றினார்.

நாளை (ஜன. 26) குடியரசு தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:

latest tamil news

குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் குறிக்கோளின் படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இது தான் நமது இந்தியாவின் சாரம்சம். நமது நாகரீகம் பழமையானது. நவீன ஜனநாயகம் இளமையானது.

ககன்யான் திட்டம் மூலம் நமது நாடு மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை ஏவ உள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. மதங்களும் , மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன. இளம் பெணகள் கல்வி உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

மத்திய அரசு திட்டங்கள் பல ஏழை எளிய மக்களுக்கு பலன்களை அளிப்பதாக உள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் தொற்று நோய் காலங்களில் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது அரசியல் சாசனம் கடந்த காலம், நிகழ் காலம் , எதிர்காலத்தில் என எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறது. .
நமது அரசியல் சாசனத்தை பின்பற்றுவது தான் நமது கடமை. நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய அம்பேத்கருக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.அரசியலமைப்பு சட்டம் வந்தநாள் முதல் இன்று வரை ஆச்சர்யத்தை தருகிறது.அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்குபார்வை இந்தியாவை நம்பிக்கையான தேசியமாக மாற்ற வழிவகுத்தது. இவ்வாறு உரையாற்றினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.