Vijay, Sangeetha: விஜய்க்கும், சங்கீதாவுக்கும் விவாகரத்தா?: மேனேஜர் சொன்ன உண்மை

Thalapathy vijay: விஜய், சங்கீதா விவாகரத்து பேச்சு பெரிதாகிய நேரத்தில் அது பற்றி மேனேஜர் ஜெகதீஷ் முதல்முறையாக பேசியிருக்கிறார்.

விவாகரத்துவிஜய்க்கும், அவரின் காதல் மனைவியான சங்கீதா சொர்ணலிங்கத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். விஜய்யை விவாகரத்து செய்துவிட்டு மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷாவை அழைத்துக் கொண்டு லண்டனில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் சங்கீதா என தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் இது குறித்து விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்விஜய்ணாவும், சங்கீதா அண்ணியும் விவாகரத்து பெறவில்லை என ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். விஜய்ணாவின் வாரிசு படம் வசூலை அள்ளிக் குவித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவருக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று வதந்தியை பரப்பிவிடுகிறார்கள். ஜெகதீஷ் அண்ணாவே சொல்லிட்டார், போயி வேலைய பாருங்க என தளபதியன்ஸ் தெரிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ்விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறி சர்தார் படப்பிடிபப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பேசினார்கள். இந்நிலையில் தான் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு காதலர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தன் காதலரை விஜய்யிடம் அறிமுகம் செய்து வாழ்த்தும் பெற்றிருக்கிறாராம்.

​Vijay: காதலில் கீர்த்தி சுரேஷ்: இப்ப என்ன சொல்றீங்கனு கேட்கும் விஜய் ரசிகாஸ்

வாரிசுவாரிசு படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நேரத்தில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. விஜய் அமைதியாக இருந்து வந்த நிலையில் தன் மேனேஜர் மூலம் விளக்கம் அளித்து அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இனியாவது விஜய்ணாவை நிம்மதியாக இருக்க விடுங்கள் என அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறான தகவல்முன்னதாக விஜய் பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே. கோபி நேற்று ட்வீட் செய்தார். அவர் கூறிதாவது, கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அது முழுக்க முழுக்க பொய். ரசிகர் சண்டை என்பது வேறு. அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம் என்றார்.

​Thalapathy Vijay: விஜய், சங்கீதா விவகாரம்: உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்​
தளபதி 67கெரியரை பொறுத்தவரை தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார் விஜய். முன்னதாக அவர்கள் கூட்டணியில் வெளியான படம் மாஸ்டர். தளபதி 67 படம் 100 சதவீதம் என் ஸ்டைல் படம் என தெரிவித்துள்ளார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.