அட்லீ இயக்கத்தில் அஜித்தா? ஏகே63 படத்தின் இயக்குனர் யார்?

தமிழ் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர் அஜித்குமார் சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் அதிகம் நடிப்பதை விரும்பி வருகிறார்.  கடந்த ஜனவரி 11-ம் தேதி ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  விஜய்யின் வாரிசு படத்தோடு மோதிய அஜித்தின் துணிவு படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூலை சாதனை புரிந்தது. ஹெச்.வினோத் இயக்கத்தில் இதற்கு முன்னர் அஜித் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்து இருந்த நிலையில் மூன்றாவது முறையாக வினோத்துடன் அஜித் துணிவு படத்தில் கூட்டணி அமைத்தார்.  இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘ஏகே62’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.  

ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சம் கொண்ட ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கிறது.  இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மற்றும் இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைக்கிறார்.  தற்போது நடிகர் அஜித் ஐரோப்பாவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார், விரைவில் சென்னை திரும்பிய நிலையில் ‘ஏகே62’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.  இந்நிலையில் நடிகர் தனது அடுத்த படத்தில் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, நடிகர் அஜித்குமார் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து தனது 63 படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  அட்லீ மற்றும் அஜித்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் இந்த படம் ‘ஏகே 63’ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அஜித்-அட்லீயின் ஏகே 63 படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இளம் இயக்குனருடன், ஸ்டைலிஷான நடிகர் நடிக்கும் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.  இதுதவிர இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.