வடக்கில் இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகள் மீண்டும் மக்களுக்கு


வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தி வரும் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகளை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மீண்டும் அந்த மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அறிவிப்பு

வடக்கில் இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகள் மீண்டும் மக்களுக்கு | Lands Held By The Military In The North

பாதுகாப்பு தரப்பினர் பயன்படுத்தும் தமது காணிகளை மீண்டும் தமக்கு வழங்குமாறு வடக்கு பகுதி தமிழ் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளதால், அந்த காணிகளில் இயங்கும் இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் ஊடாக இந்த காணிகள் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட உள்ளன.

நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக வடக்கு பகுதி மக்களுக்கு சொந்தமான காணிகள் படையினரிடம் இருக்குமாயின் அது குறித்து தேடி அறிந்து மக்களிடம் ஒப்படைக்குமாறும் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.