சுந்தர் பிச்சையின் சம்பளம் அதிரடியாக குறைப்பு: காரணம் இதுதான்

உலகின் முன்னணி பிரவுசர் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஆட்குறைப்பு அறிவிப்பு வெளியானது. சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது டெக் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பலருக்கும் ஊதியம் குறைக்கப்பட இருக்கிறது. இது குறித்து கூகுள் ஊழியர்களுடன் உரையாடிய சுந்தர் பிச்சை ஊதிய குறைப்பு குறித்த தகவலை வெளியிட்டார்.

கூகுள் ஊதியம் குறைப்பு

அப்போது, பேசிய அவர் மூத்த துணை தலைவர் உள்ளிட்ட மேலே உள்ள அனைத்து பதவிகளுக்கும் வருடாந்திர போனஸில் குறிப்பிடத்தகுந்தளவில் ஊதிய குறைப்பு இருக்கும் என தெரிவித்தார். ஆனால், எவ்வளவு சம்பளம் குறைக்கப்படும்? எப்போது குறைக்கப்படும் என்ற தகவலை எல்லாம் அவர் தெரிவிக்கவில்லை. சம்பளம் குறைக்கப்படுவதை மற்றும் ஹிண்டாக தெரிவித்துள்ளார். இதுவும் ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் இத்தகைய நடவடிக்கைக்கு கூகுள் ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 

கூகுளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு முன்பாக, அதாவது சில வாரங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சையின் சம்பளம் உயர்த்தப்பட்டது. சுந்தர் பிச்சையின் வலுவான செயல் திறனை பாராட்டிய கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், மொத்த பங்குதாரர்களின் வருமானத்தைப் பொறுத்து இந்த சம்பள உயர்வு இருக்கும் என தெரிவித்தது.     

சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம்

2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் $2 மில்லியன் அமெரிக்கன் டாலர் என அறிவித்தது. IIFL Hurun India Rich List 2022-ன் படி, கூகுள் CEO-வின் நிகர மதிப்பு 20 சதவீதம் சரிந்து ரூ.5,300 கோடியாக உள்ளது. இருப்பினும், உலகளவில் அவர் இன்னும் சிறந்த பணக்கார தொழில்முறை மேலாளர்களில் ஒருவராக உள்ளார்.

பணி நீக்கிய சுந்தர் பிச்சை 

கூகுளை பொறுத்தவரை இப்போது கடினமான காலத்தை எதிர்நோக்கியுள்ளது. அந்த நிறுவனம் 12 ஆயிரம் பேரை இப்போது வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணியாற்றியவர்கள். அவர்கள் கூகுளின் இந்த நடவடிக்கையால் மன உளைச்சலுக்கும், பொருளாதார சிக்கலுக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.