உங்களை இழக்கப் போகிறேன் தோழியே! மறைந்த 101 வயது கனேடிய மேயருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த ட்ரூடோ


கனேடிய நகரம் Mississauga-தின் மேயர் ஹேசல் மெக்கல்லின் தனது 101வது வயதில் மறைந்தார்.

ஹேசல் மெக்கல்லின்

Mississauga நகரின் மேயராக பணியாற்றி வந்தவர் ஹேசல் மெக்கல்லின். அந்நகரினை சூறாவளி போல் 12 முறை மேயராக ஆட்சி செய்து வந்தார்.

1978 முதல் 2014 வரை நடந்த தேர்தல்களில் ஹேசல் இருமுறை போட்டியின்றி வென்றார்.

பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய ஹேசல் ”பெண்ணியவாதி” என்ற சொல்லை வெறுத்தார்.

அவர் ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் தனது அணுகுமுறையை பொதுவாக அரசியலற்ற சொற்களில் விவரித்தார்.

ஹேசல் மெக்கல்லின்/Hazel McCallion

@CBC

அதாவது, ‘ஒரு மனிதனைப் போல சிந்தியுங்கள், ஒரு பெண்ணைப் போல நடந்து கொள்ளுங்கள் மற்றும் ஒரு நாயைப் போல வேலை செய்யுங்கள்’ என கூறியிருந்தது பிரபலமானது.

101 வயதில் மறைவு

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது வீட்டில் ஹேசல் (101) இறந்து விட்டதாக ஒன்டாரியோ பிரீமியர் டாக்ஃபோர்ட் அறிவித்துள்ளது.

அவரது மறைவு குறித்து மெக்கல்லியனின் வாரிசான போனி க்ரோம்பி வெளியிட்ட அறிக்கையில், ‘ஹேசல் எனது வழிகாட்டி மற்றும் அரசியல் முன்மாதிரி மட்டுமல்ல, பல பெண்கள் அரசியலில் நுழைவதற்கு உத்வேகம் அளித்ததற்கு அவர் காரணம்’ என தெரிவித்துள்ளார்.

ஹேசல் மெக்கல்லின்/Hazel McCallion

@CBC

ட்ரூடோ இரங்கல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மேயருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ‘ஹேசல் மெக்கல்லியன் தடுத்து வைக்க முடியாதவராக இருந்தார். அவர் கடினமாக உழைத்து, தனது சமூகத்திற்காக போராடினார்.

மேலும் பல தசாப்தங்களாக அயராத மற்றும் தன்னலமற்ற சேவையால் எண்ணற்ற மற்றவர்களை ஊக்கப்படுத்தினார்.

நான் உங்களை இழக்கப் போகிறேன் தோழியே. பல ஆண்டுகளாக நாங்கள் கொண்டிருந்த அரட்டைகளையும், உங்களுடன் பகிர்ந்துகொண்ட ஞானத்தையும் நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.    

ஹேசல்/ட்ரூடோ-Hazel/Trudeau

@Paul Chiasson/The Canadian Press



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.