சட்டவிரோதமாக கடத்தப்படும் தொலைபேசிகள்! நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு


நாட்டிற்குள் சட்டவிரோதமான  முறையில்  கையடக்க தொலைபேசி இறக்குமதி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் இவ்வாறு பொதிகள் ஊடாக இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இத குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  

கைத் தொலைபேசிகள்  இறக்குமதியின் போது, ​​அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைசெலுத்தாமல் பொதிகளின் ஊடாக கைப்பேசிகள் கொண்டு வரப்படுவதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

மூன்றரை பில்லியன் ரூபாய் வரி இழப்பு 

சட்டவிரோதமாக கடத்தப்படும் தொலைபேசிகள்! நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு | A Warning To The People Of Sri Lanka

இதன் ஊடாக பாரியளவில் வரி வருமானம் இழக்கப்படும் நிலையில், 2021-2022 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் உண்டியல் முறையில் வெளியேறியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கி முறையின் கீழ் எந்த பரிவர்த்தனையும் இடம்பெறுவதில்லை.

எங்களின் தோராயமான கணக்கீடுகளின்படி, அரசாங்கத்திற்கு சுமார் மூன்றரை பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவே இவ்வாறு தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டு வருகின்றது.

இந்த கைப்பேசிகள் எதுவும் TRC ஆல் அங்கீகரிக்கப்படவில்லை. இது குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை. எனவே, ​குறித்த கைப்பேசிகளை இவ்வாறு கொண்டு வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.