நடுத்தர வர்க்கத்தினரை சென்றடையுங்கள்; அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு.!

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நிதி அமைச்சக அதிகாரிகள் பாரம்பரிய ”அல்வா” கிண்டி வழங்கும் விழாவை கடந்த 26ம் தேதி நடத்தினர். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பட்ஜெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ரகசியம் காக்கும் வகையில் ‘அல்வா’ விழாவுக்குப் பிறகு ‘லாக்-இன்’ செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள், நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் பகுதியில் தான் நாட்டின் பட்ஜெட் அறிக்கையை தயாரிப்பார்கள். இதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அவர்கள் இங்குதான் தங்கவேண்டும். பட்ஜெட் ரகசியம் காக்கும்பொருட்டு அவர்கள் வீடுகளுக்கு செல்லவும் அனுமதி இல்லை.

இதன் பிறகு, பட்ஜெட் ஆவணங்களின் தொகுப்பு டிஜிட்டல் வடிவத்தில் தயார் செய்யப்படும். மத்திய பட்ஜெட் ஆவணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக காகிதமற்ற வடிவத்தில் தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் யுக்தி புயல் பலமாக வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக, முழு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன் அளிக்கும் திட்டங்களை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட படிநிலைகள் குறித்து பல்வேறு அரசுத் துறைகள் அனுப்பிய முன்மொழிவுகளை நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், இது நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்கு பயனளிக்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், 2014 முதல் இதுவரை மோடி அரசு மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அமைச்சரவை செயலாளர் விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பிரதமர் பல்வேறு ஆலோசனை வழங்கினார். அமைச்சர்கள் அரசின் திட்டங்கள் மீது கவனம் செலுத்தி அவை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கூட்டத்தில் கூறினார். அமைச்சர்களும் தனது அமைச்சகத்தின் பணிகளை கடுமையாக ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு பல்வேறு வழிகளில் நம் அரசு உதவிய முன்முயற்சிகளின் விவரங்களை அமைச்சர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். உங்கள் அமைச்சகத்தின் பணிகள் குறித்து சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜி 20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு பெரிய சாதனை என்ற கருத்தையும் மற்றும் உச்சிமாநாடு பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மோடியை நம்புங்க… பாஜகவிற்கு மெஜாரிட்டி வாக்குகள்- பெலகாவியில் அமித் ஷா வியூகம்!

மேலும் சமூக மற்றும் கலாச்சார சாதனைகளை ஊக்குவிக்க தனது அமைச்சர் சபையை வலியுறுத்திய பிரதமர், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மக்களுக்கு சிறப்பாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.