நமது நிலத்தில் சீனர்கள்..கப்சிப் ஒன்றிய அரசு..ராகுல் காந்தி சாடல்.!

கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது.

அங்கு லகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்றார். இந்தநிலையில் ஜம்மு – காஷ்மீரிலும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.

எதிர்பாராத கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தவறிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால் அதை ஜம்மு காஷ்மீர் காவல்துறை மறுத்தது. இந்தநிலையில் நாளை நிறைவடையும் ராகுல் காந்தி யாத்திரையில் அதிகளவு கூட்டம் கூட வாய்ப்பிருப்பதால், தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்து விட்டதாக கூறும் ஒன்றிய அரசை ராகுல் காந்தி விமர்சித்தார். ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இங்கு அமைதியான சூழல் உள்ளதாக ஒன்றிய அரசு கூறிவருகிறது. அமைதியான சூழல் இருப்பதாக கூறும் அரசு, உள்துறை அமைச்சரை காஷ்மீரில் நடைபயணம் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அப்போது அவர்களுக்கு உண்மை நிலை தெரியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாளையுடன் ராகுல் காந்தியின் யாத்திரை முடிவடைகிறது. ஸ்ரீ நகரில் தேசிய கொடியை ராகுல் காந்தி ஏற்றுவதன் மூலம் யாத்திரை நிறைவடைகிறது. கடைசி நாளில் பங்கேற்க 21 எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சமாஜ்வாடி, திரிணாமுல் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடைசிநாள் யாத்திரையில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது.

அந்தவகையில் நாளை நடைபெறும் கடைசிநாள் யாத்திரையில் சுமார் 15 எதிர்கட்சிகள் பங்கேற்க உள்ளன. இந்தநிலையில் இன்று காஷ்மீரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறும்போது, ‘‘சீனா நமது நிலத்தில் வேறூன்றி உள்ளது. ஆனால் அதை எதிர்க்கும் வகையிலான ஒன்றிய அரசின் செயல்பாடுகள் ஆபத்துக்குறியதாக உள்ளது.

சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு தெரிவிக்க மறுக்கிறது. இது மிகவும் அபாயகரமான போக்காகும். இது நம் எதிரிகளுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். சீனர்களைக் கையாள்வதற்கான வழி, அவர்களை உறுதியாகக் கையாள்வதும், அவர்கள் நமது நிலத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதும் அரசின் கடைமையாகும்.

இந்தியாவின் டாப் 10 முதல்வர்கள் யார்? ஸ்டாலினுக்கு எந்த இடம்? கருத்துக்கணிப்பு முடிவுகள்!

நான் சமீபத்தில் சில முன்னாள் ராணுவத்தினரைச் சந்தித்தேன், லடாக்கிலிருந்து வந்த ஒரு தூதுக்குழு கூட 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனர்கள் கைப்பற்றியதாகத் தெளிவாகக் கூறியுள்ளனர். இந்திய எல்லையில் இருந்த பல ரோந்துப் புள்ளிகள் சீனாவின் கைகளில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்’’ என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.