பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. ஏறக்குறைய 8 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வு ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இணையத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 6 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னர் வரகூடிய தேதிகளில் நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

செய்முறை பொதுத்தேர்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கபடும் இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்வுகளுக்கும் செய்முறை தேர்வுகளுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 5-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 17-ம் தேதியும் வெளியாகலாம். அதே போல் 11ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

முன்னதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையிலான நடைபெறும் என்றும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 நடைபெறும் என்றும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.