NoiseFit Force: பட்ஜெட் விலைக்கு ப்ளூடூத் காலிங் வசதியுடன் ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட் வாட்ச்!

ஸ்மார்ட் வாட்ச் என்பது இந்தியாவில் மிகப்பெரும் அளவு வரவேற்பு பெட்ரா ஒரு கருவியாக உள்ளது. இந்த கருவி உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகிறது. முக்கியமாக இந்த செக்மென்ட்டில் 5000 ஆயிரம் ரூபாய் வரை உள்ள ஸ்மார்ட் வாட்ச் அதிக அளவு விற்பனை ஆகிறது.

தற்போது இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்களில் ஒன்றான NoiseFit நிறுவனம் புதிதாக 2,499 ஆயிரம் ரூபாய் பட்ஜெட் விலையில் புதிய NoiseFit Force என்ற Rugged Smartwatch ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் வரும் பிப்ரவரி 3 மதியம் 12 மணி முதல் Noisefit இணையதளம் மற்றும் Amazon ஆகிய ஷாப்பிங் தளங்களில் விற்கப்படுகிறது. இது JetBlack, Teal Green, Misty Grey ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஸ்மார்ட் வாட்ச் வசதிகள்

இது ஒரு முரட்டுத்தனமான அமைப்புடன் கொண்ட ஒரு Rugged Smartwatch ஆகும். இதனால் இது மிகப்பெரிய அதிர்வுகள் மற்றும் கடினமான மோதல்களை தாங்கக்கூடியது. இதில் 1.32 இன்ச் டிஸ்பிலே (360 x 360 Pixels) மற்றும் 550 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு கொண்டுள்ளது. இந்த வாட்சில் ப்ளூடூத் காலிங் வசதி இருப்பதால் நம்மால் அலைபேசிகளை இணைக்கவும் எடுக்கவும் முடியும். இதில் AI வாய்ஸ் அஸ்சிஸ்ட் உள்ளது.

இதில் 150 வாட்ச் பேஸ், பலவகையான ஸ்போர்ட்ஸ் மோட், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட Health Tracking, SpO2 monitoring, Heart rate Tracking, Running, Cycling, Call Alert, Incoming Call alert, Sleep Monitoring போன்ற வசதிகள் உள்ளன. மேலும் Sedentary Reminder, Remote Control Camera, Alaram Clock Reminder, Stopwatch போன்ற வசதிகள் உள்ளன.

இந்த வாட்ச் ஒரு முறை நாம் முழு சார்ஜ் செய்தால் 1 வார காலம் நீடிக்கும் பேட்டரி வசதி கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தினால் 2 வரை நாட்கள் நீடிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.