இந்த மாதம் முழுவதும் சேலம் – கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து..!!

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் – கோவை இடையிலான பயணிகள் (MEMU) ரயிலின் இயக்கம், இன்று (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் – கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் – கோவை பயணிகள் (MEMU) ரயில் (எண்.06803) மற்றும் கோவை – சேலம் பயணிகள் (MEMU) ரயில் (எண்.06802) ஆகியவற்றின் இயக்கம், இன்று (1-ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேலம் – கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களும், சேலம் – கோவை பயணிகள் (MEMU ) ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.