ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நேரம் பட்ஜெட் உரையாற்றினார் நிர்மலா| Nirmala Sitharaman Delivers Her Shortest Budget Speech At 87 Minutes

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 87 நிமிடங்கள் உரையாற்றினார். இது தான் அவர் எடுத்து கொண்ட குறைந்தபட்ச நேரம்.

2023 – 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பார்லிமென்டில் உரையாற்றினார். ‘அமிர்த கால கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது’ எனக்கூறி உரையை துவக்கிய நிர்மலா சீதாராமன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் நரேந்திர மோடி அரசின் முதல் கொள்கை எனக்கூறிய அவர், சரியாக 87 நிமிடங்கள் உரையாற்றினார்.

latest tamil news

தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் 2021 ல் 92 நிமிடங்கள் உரையாற்றினார்.

latest tamil news

அதேநேரத்தில் 2020 ல் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நிர்மலா பேசினார். இது தான் இந்திய பட்ஜெட் உரையில் நீண்ட நேர உரையாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.