ரூ.15.4 லட்சம் கோடி: கடன் வாங்க திட்டம்| Rs 15.4 lakh crore: Borrowing plan

செலவுகளை எதிர்கொள்ளும் வகையில், வரும் நிதியாண்டில் சந்தைகளில் இருந்து, ௧௫.௪ லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டைவிட அதிகமாகும்.

செலவுகளை சமாளிக்கும் வகையில், நடப்பு2022 – 2023 நிதியாண்டில், 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது, 14.21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் 2023 – 2024 நிதியாண்டில், 15.4 லட்சம் கோடி ரூபாயை சந்தையில் இருந்து கடன் வாயிலாக திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய – மாநில அரசுகளின் ஒட்டுமொத்த கடன் தொகை, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ௮௩ சதவீதமாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.