Thalapathy 67: தளபதி 67 பூஜை வீடியோ..செம ஸ்டைலாக இருக்கும் தளபதி..வீடியோவில் இதை கவனித்தீர்களா?

உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு பிறகு தென்னிந்தியாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் தெரிவித்தனர். இந்நிலையில் லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய்யுடன் மீண்டும் இணையப்போவதாக அறிவித்தார்.

பொதுவாக விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான ஒன்றுதான, ஆனால் இம்முறை விஜய் லோகேஷுடன் இணைவதால் அந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. கடந்தமுறை இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருந்தார் லோகேஷ்.

Thalapathy 67: தளபதி 67 டைட்டிலை லாக் செய்த லோகேஷ்..இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

ஆனால் இம்முறை தளபதி 67 திரைப்படத்தை முழுக்க முழுக்க தன் பாணியில் உருவாக்கி வருகின்றார் என தகவல் வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக படத்தை பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தியது படக்குழு.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து இப்படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின் போன்றவர்கள் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் அறிவிப்பாக இப்படத்தின் பூஜை போடப்பட்ட வீடியோ வெளியாகி செம வைரலாகி வருகின்றது. தளபதி 67 படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அப்போது ஒரு புகைப்படம் கூட படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் பூஜை போடப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய், திரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் இப்படத்தின் பூஜையில் அனைவர்க்கும் பிடித்த நடிகரான மன்சூர் அலி கான் கலந்துகொண்டுள்ளார். இவரும் லோகேஷும் இந்த வீடியோவில் இருந்தது தனி கவனம் பெற்றுள்ளது.

ஏனென்றால் லோகேஷ் மன்சூர் அலி கானின் தீவிர ரசிகர் என பலமுறை தெரிவித்துள்ளார். எனவே இப்படத்தில் அவரை நடிக்க வைத்துள்ள லோகேஷ் பிரத்யேகமாக அவருக்கென வித்யாசமான கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.