காதலித்து நெருக்கமாக வாழ்ந்த நிலையில் தயாரிப்பாளரிடம் அடி, உதை வாங்கி தப்பித்த நடிகை

மும்பை: திரைப்பட தயாரிப்பாளரைக் காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்த நடிகை புளோரா சைனி, அவர் தன்னை கொடூரமாக தாக்கியதாகச் சொல்லி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், புளோரா சைனி. தமிழில் விஜயகாந்துடன் ‘கஜேந்திரா’, பிரபு மற்றும் கார்த்திக்குடன் ‘குஸ்தி’ மற்றும் ‘ஸாரி… எனக்கு கல்யாணமாயிடுச்சு’, ‘குசேலன்’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘நானே என்னுள் இல்லை’, ‘கனகவேல் காக்க’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கவுரவ் கோஷியை தீவிரமாக காதலித்தேன். பிறகு அவருடன் நெருக்கமாக இருந்தேன். ஆனால், சில நாட்களில் எங்களுக்கு இடையே பலத்த பிரச்னை ஏற்பட்டது. அவர் என் முகம் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் அடிக்கடி குத்துவார். என் செல்போனை எடுத்துக்கொண்டு, இனி சினிமாவில் நான் நடிக்கக்கூடாது என்று தடுத்தார். கிட்டத்தட்ட 14 மாதங்களாக என்னை யாரிடமும் பேச அவர் அனுமதிக்கவில்லை.

ஒருநாள் மாலை என் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கினார். இப்படியே போனால் உயிர் பிழைக்க முடியாது என்று பயந்து, அவரிடம் இருந்து தப்பித்து ஓடினேன்.சில நாட்களுக்குப் பிறகு நான் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். அனைவரிடமும் முன்புபோல் பேசிப் பழக சில நாட்களானது. தற்போது நான் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல நம்மைப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் மிகப்பெரிய ஆசிர்வாதங்களும், அற்புதமான பாடங்களும் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.