அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து 6வது நாளாக வீழ்ச்சி!: உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார்..!!

குஜராத்: அதானி குழும நிறுவன பங்குகள் 6வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்தது.  கடந்த 5 நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் அதாவது ரூ.1,338 சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 50 சதவீதம் அதாவது ரூ.1909 குறைந்து ரூ.1931ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.3841ஆக இருந்த அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை முப்பதே நாளில் ரூ.1931ஆக சரிந்தது.

அதானி போர்ட்ஸ் பங்கு விலை ரூ.21.65 குறைந்து ரூ.474.15ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை ரூ.115.50 சரிந்து ரூ.1039ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.10.60 சரிந்து ரூ.202.05ஆக வர்த்தகமாகி வருகிறது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.172.35 சரிந்து ரூ.1551.15ஆனது. அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை ரூ.189.70 சரிந்து ரூ.1707.70 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி வில்மர் நிறுவன பங்கு விலை ரூ.22.15 குறைந்து ரூ.421ஆக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

உலக பணக்காரர் பட்டியல்: 16வது இடத்தில் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்கு கெளதம் அதானி தள்ளப்பட்டார். அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் கடும் சரிவைச் சந்தித்ததால் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது. உலக கோடீஸ்வரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி 16வது இடத்துக்கு சரிந்துள்ளார். இன்று ஒரேநாளில் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.1,65,390 கோடி சரிந்து ரூ.5,60,850 கோடியாக வீழ்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.