ஈரோடு கிழக்கு – அதிமுக Vs பாஜக : நள்ளிரவில் நடந்த மாற்றம்- போருக்கு தயாரான எடப்பாடி

அதிமுக கூட்டணியில் ஆரம்பம் முதலே நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை தற்போது கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. இதில் யார் குளிர் காயப் போகிறார்கள் என்பது தான் இப்போது அரசியல் அரங்கில் அதிகம் உலா வரும் கேள்வி.

கூட்டணியில் பிளவு!அதிமுக உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களை சந்தித்தனர். கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இவ்வாறு தனித்தனியாக சந்தித்த நிலையில் இது தற்போது வளர்ந்து கூட்டணியிலும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அணி Vs பாஜக அணிமத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் அதிமுக தலைமை வகிக்கிறது. இதில் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் இடம்பெற்ற பாமக தற்போது இல்லை. அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இரட்டை இலையை மறந்த கட்சிகள்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு அதிமுகவுக்குள் மட்டுமல்லாமல் இந்த கூட்டணிக்கட்சிகளுக்குள்ளும் சில சலசலப்புகளை உருவாக்கி ஒரு மாற்றத்துக்கு வழியமைக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்ற போதும், பாஜக, பாமக தவிர்த்து பிற கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலையில் தான் போட்டியிட்டன என்ற போதும் சில கட்சிகள் பாஜகவுடன் அதிக நெருக்கம் காட்டுகின்றன.
‘முற்போக்கை’ இணைத்த எடப்பாடிஇடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் பாஜக இழுத்தடித்து வரும் நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற சிறிய கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் உள்ளன. இந்த சூழலில் நேற்று வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி பெயரையும் மாற்றினார். தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று குறிப்பிடப்பட்டது.
யார் யார் எந்த பக்கம்?பெயர் மாற்றத்தோடு பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை. பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என அறிவித்த ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை. அதே சமயம் ஜிகே வாசன், ஜெகன்மூர்த்தி, கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது மாற்றம்!இந்த பெயர் மாற்றம் டெல்லி வரை எதிரொலித்ததன் விளைவாக நேற்று மாலை இதில் மாற்றம் செய்யப்பட்டது. அதனால் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ராசியாகிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன.
நள்ளிரவில் நடந்த மாற்றம்- போருக்கு தயாரான எடப்பாடி​​

ஆனால் நேற்று நள்ளிரவில் மீண்டும் கூட்டணியின் மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில், ‘எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவை எதிர்த்து துணிச்சலாக அரசியல் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.