உச்சநீதிமன்ற 73-வது ஆண்டு தினம் கொண்டாட முடிவு| Decision to celebrate 73rd anniversary of Supreme Court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நாட்டின் முதன்முறையாக வரும் 04-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 73-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு குடியரசாக ஜன.26-ம் தேதி 1950-ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் இரு நாட்களில் 1950ம் ஆண்டு ஜன.28-ம் தேதி உச்சநீதிமன்றம் துவங்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 04-ம் தேதியன்று பராம்பரியமிக்க உச்சநீதிமன்றத்தின் 73-வது ஆண்டு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் வலியுறுத்தியுள்ளார்.

latest tamil news

இதையடுத்து இதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.