பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது, நாடுகடத்தல்தான்: சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி எச்சரிக்கை…


சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள், நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.

இனி நட்சத்திர ஹொட்டல் எல்லாம் கிடையாது

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் இனி நான்கு நட்சத்திர ஹொட்டல்களிலெல்லாம் தங்கவைக்கப்படமாட்டார்கள். கைது, நாடுகடத்தல்தான் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் ரிஷி.

வரும் வாரங்களில் புலம்பெயர்ந்தோரின் படகுகளை நிறுத்தும் மசோதா சட்டமாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள ரிஷி, அந்த மசோதா சொல்லும் செய்தி, நீங்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் வந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவீர்கள் என்பதுதான்.

சட்ட விரோத புலம்பெயர்தல் பிரச்சினையை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்றார் அவர்.
 

பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது, நாடுகடத்தல்தான்: சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி எச்சரிக்கை... | Rishi Sunak Small Boat Crossings Law

Credit: Steve Back



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.