FPO: அதானிக்கு அடுத்த பின்னடைவு! – அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி – தவிர்க்க வேண்டிய 2 கடன்கள்!

அதானி குழுமத்துக்கு அடுத்த பின்னடைவு… கைவிடப்பட்ட FPO பங்கு விற்பனை!

சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்…

தானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்கள் குறித்த ஆய்வை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்தே பங்குச் சந்தையில் இன்று மீண்டும் பெரிய சரிவை அதானி குழும நிறுவன பங்குகள் எதிர்கொண்டதாக தெரிகிறது.

இதனிடையே ரூ.20000 கோடி மதிப்பிலான FPO பங்கு விற்பனை மூலம் நிதித் திரட்டும் திட்டத்தை சமீபத்தில் அதானி குழுமம் செயல்படுத்திய நிலையில், திடீரென்று கவுதம் அதானி பங்கு விற்பனையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதானியின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்..? இது தொடர்பாக தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ள விளக்கம் உள்ளிட்டவற்றை

விரிவாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்: அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி!

கழுகார் அப்டேட்ஸ்

‘இதுக்கு மட்டும் பணம் இருக்குதா..?’

கேலிக்குள்ளாகும் ட்ரிபுள் இனிஷியல் தலைவர்!

‘அ.தி.மு.க-வை மீட்பதே லட்சியம்’ என்று சொல்லி புதிய கட்சி தொடங்கிய அந்த ட்ரிபுள் இனிஷியல் தலைவர், ‘கட்சிக்குச் செலவு செய்வதில் கஞ்சர்’ என்று பெயர் வாங்கியவர். ஆனால், குடும்பத்தை கவனிப்பதில் அவருக்கு இணை யாருமில்லை என்கிறார்கள் கட்சியில். சமீபத்தில் தஞ்சையில் ஓரிடத்தை வாங்கியிருக்கும் ட்ரிபுள் இனிஷியல் தலைவர், அங்கே சகல வசதிகளோடு வீடு கட்டுவதற்கான முன்னேற்பாடுகளையும் தொடங்கிவிட்டாராம்.

“கட்சிக்குக் காசு கேட்டால் பஞ்சப்பாட்டு பாடுகிறார். இதுக்கு மட்டும் பணம் இருக்குதா?” என்று நக்கலாகச் சிரிக்கிறார்கள் கட்சியின் தஞ்சை நிர்வாகிகள்!

கழுகார் அப்டேட்ஸில் மேலும்…

ஈரோடு: ‘ரோஸ் மில்க்’ விநியோகத்தில் முந்தும் அதிமுக!

அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி!

மா.செ-வை மிரட்டும் டிரைவர்… பின்னணியில் வீடியோ!

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ்!

அனைத்தையும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

இடைத்தேர்தல்: முடிவுகள் எடுப்பதில் திணறுகிறாரா அண்ணாமலை?!

அதிமுக – அண்ணாமலை

ரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க தரப்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களமிறக்கி கூட்டணியிலிருக்கும் அனைவரும் அவருக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டங்கள், வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு என வேலைகளை முடுக்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளைவிட பெரிய கட்சியாகவும், தேசியக் கட்சியாகவும் இருக்கும்

பா.ஜ.க தன் முடிவுகளை எடுக்க ஏன் திணறுகிறது..? இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர்கள் கூறுவது என்ன என்பது உள்ளிட்ட

விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஆபாசப் படங்கள் பார்க்கும் 50% குழந்தைகள்’ : கேள்விக்குள்ளாகும் ஆன்லைன் பாதுகாப்பு!

ஆபாச வீடியோ

2022 செப்டம்பர் மாதத்தில், ‘காமன் சென்ஸ் மீடியா’ என்ற நிறுவனம் ‘இளம் வயதினர் மற்றும் ஆபாசப் படங்கள்’ என்ற தலைப்பில், 13 முதல் 17 வயதுடைய 1,350 பேரிடம் ஆய்வு நடத்தியது.

ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. குறிப்பாக 13 வயதிலேயே 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இளம் பருவத்தினர் ஆபாசப் படங்களைக் கண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய 2 வகை கடன்கள்!

கடன்

ன்றைக்கு பல இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடன் சுமார் 20 – 22 வயதி லேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடுகிறது. அதுவரைக்கும் பெற்றோர் பணத்தைச் செலவு செய்து வந்த அவர்களுக்கு கைநிறைய பணம் கிடைத்ததும் சந்தோஷமாகி விடுகிறார்கள்.

இஷ்டத்துக்கு செலவு செய்ய தொடங்கி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடன் வாங்கவும் செய்கின்றனர். கடன் வாங்குவது தவறில்லை என்றாலும், அதில் உரிய விழிப்புடன் இருப்பதில்லை.

இந்த நிலையில், இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய இரண்டு வகை கடன்கள் என்னென்ன மற்றும் முதலீடு விஷயத்தில் அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை விளக்குகிறார் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் சதீஷ்குமார்.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க…

டார்க் சாக்லேட் எடையை குறைக்குமா? 

டார்க் சாக்லேட்

ந்த 21-ம் நூற்றாண்டில் தகவல்கள் மின்னல் வேகத்தில் பரவும் காரணத்தால் மாதா மாதம் ஒரு சூப்பர் உணவு சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த ‘சூப்பர் உணவு’ பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓர் உணவு கசப்பான ‘டார்க் சாக்லேட்’. சாக்லேட்டை அதன் இனிப்புக்காகத்தான் அனைவரும் சாப்பிடுவோம். ஆனால் சாக்லேட்டில் உள்ள கோக்கோ அளவை அதிகப்படுத்தி அதைக் கசப்பாக மாற்றி ஆரோக்கியம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

டார்க் சாக்லேட் பற்றிய இரண்டு உண்மைகளை இன்று வெளியான ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ள ‘ஆரோக்கியம் ஒரு பிளேட்’ தொடரில் உடைக்கிறார் டாக்டர் அருண்குமார்.

அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

சம்சாரம் அது மின்சாரம்: ‘அப்போதே அப்படியொரு க்ளைமாக்ஸ்!’

சம்சாரம் அது மின்சாரம்

ஃபேமிலி டிராமா எனப்படும் குடும்பத் திரைப்படங்களுக்கு என்றுமே அழிவில்லை. குடும்பம் என்கிற நிறுவனம் இருக்கும்வரை இந்தத் திரைப்படங்களும் வாழும். தமிழ் சினிமாவில் பீம்சிங் தொடங்கி ஏராளமான ‘குடும்பப் பட’ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில் முக்கியமானவர் விசு. அவர் இயக்கியதில் முக்கியமான திரைப்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. அதுவரை வெளியான அத்தனை குடும்பத் திரைப்படங்களிலிருந்தும் இந்தப் படம் சொன்ன ‘செய்தி’ வித்தியாசமானது மட்டுமல்ல, இயல்பானதும் கூட.

‘சம்சாரம் அது மின்சாரத்தில்’ அப்படியென்ன ஸ்பெஷல்?

படம் குறித்த சுவாரஸ்யமான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.