#PIBFactCheck: 10ம் வகுப்பு தேர்வு இனி கிடையாது… வைரலாக பரவும் செய்தி! உண்மை என்ன!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: புதிய கல்விக் கொள்கையின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது என சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்தச் செய்தியில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை PIB இன் உண்மைச் சோதனைக் குழு கண்டுபிடித்தது.

PIB சொல்வது என்ன?

புதிய கல்விக் கொள்கையின் கீழ் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இருக்காது என்ற கூற்றுகளை ‘PIB Fact Check’ வியாழக்கிழமை மறுத்துள்ளது. PIB Fact Check படி, ’10வது போர்டு இனி கிடையாது’  எனக் கூறும் சமூக ஊடக செய்தி போலியானது. இது தொடர்பாக கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப்பில் பரவும் ஒரு செய்தியில், சில மாற்றங்களுடன் புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும், புதிய மாற்றங்களில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இல்லை, எம்ஃபில் படிப்பும் இருக்காது எனவும் 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் மட்டுமே இருக்கும் என்றும் வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பலமுறை அனுப்பப்பட்டுள்ளது. PIB Fact Check தனது ட்விட்டர் பதிவில், புதிய கல்விக் கொள்கையின்படி, 10 ஆம் வகுப்புக்கு போர்டு தேர்வு இருக்காது என்று ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

 

வைரலான செய்தியின்படி, புதிய கல்விக் கொள்கையில் 12ம் வகுப்பு பொது தேர்தல் மட்டுமே இருக்கும். MPhil இனி கிடையாது. 4 வருட கல்லூரி பட்டப்படிப்பு இருக்கும். 10வது போர்டு முடிந்தது. மேலும் போலி வாட்ஸ்அப் செய்தியில், புதிய கல்விக் கொள்கையில், இனி 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் தேசிய மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும். மீதமுள்ள பாடங்கள், ஆங்கிலத்தில் இருந்தாலும், ஒரு பாடமாகவே கற்பிக்கப்படும் என் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.