Thalapathy 67: ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதியை இம்ப்ரஸ் செய்த பிரபலம்..விஷயத்தை கேட்டு பதறிப்போன ரசிகர்கள்..!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம் இணைந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாக்கியுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. அதைத்தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டது.

Thalapathy 67: அனைவரும் எதிர்பார்த்த தளபதி 67 டைட்டில் இதுதானா ?

14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார் த்ரிஷா. இதையடுத்து அர்ஜுன், மிஸ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் மிஸ்கின் நெருக்கமாக பழகி வருகிறாராம். மிஸ்கின் நகைச்சுவையாக பேசுவது விஜய்க்கு மிகவும் பிடித்து போக ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மிஷ்கினுடன் நேரம் செலவழித்து வருகிறாராம் விஜய்.

இந்த தகவலை கேள்வி பட்ட ரசிகர்கள் சிலர், விஜய்க்கு மிஷ்கினை பிடித்துவிட்டதால் எங்கே அடுத்த படத்தை இயக்க அவருக்கு கால்ஷீட் கொடுத்துடப்போறார் என பதறி வருகின்றனர். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் மிஸ்கின் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.