'நான் சந்தித்த அபாயகரமான பந்து வீச்சாளர் பும்ரா' – இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ருசிகர பேட்டி வருமாறு:-

கேள்வி: 20 ஓவர் கிரிக்கெட்டில் நீங்கள் இதுவரை எதிர்கொண்ட பவுலர்களில் ஆக்ரோஷமான, அபாயகரமான பவுலராக யாரை சொல்வீர்கள்?

பதில்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.

கேள்வி: இன்னொரு பேட்ஸ்மேனிடம் இருந்து காப்பியடிக்க விரும்பும் ஷாட் எது?

பதில்: டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), வேகப்பந்து வீச்சில் லாவகமாக அடிக்கும் ‘ஸ்வீப் ஷாட்’.

கேள்வி: இங்கிலாந்து அணியின் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி அல்லது 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை வெற்றி இவற்றில் மிகப்பெரிய வெற்றியாக எதை சொல்வீர்கள்?

பதில்: 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி.

கேள்வி: நீங்கள் ஒரு ஆட்டத்தை டி.வி.யில் பார்க்கும் போது, ஸ்டம்பு மீதுள்ள மைக்கில் பதிவாகும் பேச்சுகளில் யாருடைய பேச்சை கேட்க விரும்புவீர்கள்?

பதில்: இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

கேள்வி: முதலாவது டெஸ்ட் சதம் (இந்தியாவுக்கு எதிராக, 2018) அல்லது சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை அடித்த ஒரே சதம் (இலங்கைக்கு எதிராக, 2021) இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் எது?

பதில்: முதல் டெஸ்ட் சதம்.

கேள்வி: நீங்கள் விளையாடியதில் யாரை சிறந்த கேப்டனாக பார்க்கிறீர்கள்?

பதில்: இயான் மோர்கன்.

கேள்வி: இங்கிலாந்து வீரர்களின் ஓய்வறையில் அதிகமாக சத்தம் போட்டு பேசும் வீரர் யார்?

பதில்: ஜாசன் ராய்.

கேள்வி: முதல்முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் களம் இறங்க உள்ள சக நாட்டு வீரர் ஜோ ரூட்டுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை?

பதில்: எல்லா ஊடகத்தினரையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று சொல்வேன்.

கேள்வி: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் இடையே அதிக தூரம் சிக்சர் அடிக்கும் போட்டி நடந்தால் யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: சஞ்சு சாம்சன்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.