75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் 588 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை, சிறைச்சாலையில் ஒழுங்க விழுமியங்களுக்கு உட்பட்டு சிறந்த முறையில் செயற்பட்ட 31 பேரும் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை மேலதிக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.