விபத்திற்கு பிறகு ரிஷப் பந்த் பகிர்ந்த முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், டிசம்பர் 30-ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். விபத்திற்குப் பிறகு பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பந்த், தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியில் காற்றை சுவாசிப்பதாக ஸ்டோரியில் படத்தை பகிர்ந்துள்ளார்.  இதன் மூலம் தான் குணமடைந்தது குறித்த அறிவிப்பை ரசிகர்களுக்கு வழங்கினார். பகிரப்பட்ட படத்தில், பந்த் வெளியில் அமர்ந்து, புதிய காற்றை மீண்டும் உணர முடிந்தது என்று பதிவிட்டு இருந்தார்.  கடந்த இரண்டு மாதங்களாக பெட் ரெஸ்டில் இருந்த பந்த் தற்போது குணமாகி வருவது வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், பந்தின் சேவைகள் நிச்சயமாக அணி தவறவிடும். இந்திய டெஸ்ட் அணியில் பந்த் தவிர்க்கமுடியாத வீரராக இருந்து வருகிறார்.  கப்பாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்த் கடைசி வரை போராடி வரலாற்று வெற்றியை பெற்று தந்தார்.  “இந்தியா உண்மையில் ரிஷப் பந்தை மிஸ் செய்யப் போகிறது. ஆஸ்திரேலியர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர் ஒரு சிறந்த பேட்டர், எதிர் அணிக்கு பயம் ஏற்ப்படுத்துவார்.  விரைவாக ரன் குவித்து, ஒரே செஷனில் ஆட்டத்தை மாற்றுவார். பந்த் அப்படிப்பட்ட ஒரு வீரர்” என்று சேப்பல் கூறினார். 

pant

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்காக மத்தியப் பிரதேசத்துக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள், உஜ்ஜயினின் புகழ்பெற்ற மகாகாலேஸ்வர் கோயிலுக்குச் சென்று  பந்த் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். வீரர்கள் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் திங்கள்கிழமை அதிகாலை இந்திய கிரிக்கெட் அணியின் ஊழியர்களுடன் மகாகால் கோவிலை அடைந்தனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், தங்கள் அணி வீரர் பந்த் விரைவில் குணமடைய மகாகலை பிரார்த்தனை செய்தோம் என்று கூறினார்.  

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.