பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை… நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 90 மணி நேரம்: கண்ணீர் காட்சி


துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை ஒன்று 90 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட 90 மணி நேரம்

துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்னர் நீண்ட 90 மணி நேரம் கடந்த நிலையில், பச்சிளம் குழந்தையும் அதன் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை... நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 90 மணி நேரம்: கண்ணீர் காட்சி | Baby Buried Quake Rubble Before Being Rescued

@getty

தெற்கு துருக்கியின் Samandag நகரிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைக்கு எந்த காயமும் இனி ஏற்படக்கூடாது என கவனமுடன் செயல்பட்ட மீட்புக்குழுவினர், பத்திரமாக இன்னொரு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Yagiz என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குழந்தை Yagiz மட்டுமின்றி, 3 வயது Zeynep Ela Parlak என்பவரும் கட்டிட இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை... நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 90 மணி நேரம்: கண்ணீர் காட்சி | Baby Buried Quake Rubble Before Being Rescued

@getty

23,000 மக்களுக்கும் மேல் பலி

இதனிடையே, Gaziantep நகரில் 66 வயதான Murat Vural என்பவர் நீண்ட 90 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 23,000 மக்களுக்கும் மேல் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2011ல் ரிக்டர் அளவில் 9.1 என பதிவான ஜப்பான் நிலநடுக்கத்தில் 18,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

பிறந்து 10 நாட்களேயான பச்சிளம் குழந்தை... நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 90 மணி நேரம்: கண்ணீர் காட்சி | Baby Buried Quake Rubble Before Being Rescued

@reuters

துருக்கியில் இதுவரை19,388 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 77,711 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 4,043 எனவும் காயங்களுடன் தப்பியவர்கள் 5,297 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.