புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாட்டின் வளர்ச்சியை முன்னி றுத்தும் அதே வேளையில் நிதி நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய வருமானவரி விதிப்பு முறை யில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அந்த முறையில் ரூ.7 லட்சம் வரையிலான தனிநபரின் ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது.
அந்த முறையின் கீழ் அடிப்படை வரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 வரை நிலையான விலக்குக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான நடுத்தர வகுப்பு மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் புதிய வரி விதிப்பு முறை அமைந்துள்ளது. இதன் மூலமாக செலவழிப்ப தற்குக் கூடுதலான பணம் மக்க ளின் கையிருப்பில் இருக்கும். அனைத்துத் தரப்பி னருக்கும் பயன் அளிக்கும் வகையில் சரிவிகிதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அதானி விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது “நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கும் தக வலை இங்கு கூறமுடியாது. இந்தியாவில் உள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் அனுபவப்பூர்வமானவை. இந்த துறையில் இந்தியா எப்போதும் நிபுணத்துவமானது’’ என்று தெரிவித்தார்.