பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்!

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா மக்களுக்காக குவைத் 67 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது.

பாரிய நிதி

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

அந்த வகையில் குவைத் தற்போது பாரிய அளவில் நிதி திரட்டியுள்ளது.

குவைத்தின் சமூக விவகார அமைச்சகம் தொடங்கிய நன்கொடை இயக்கத்தில், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 1,29,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்! | Kuwait People Fund Raise Trukey Syria

அதனைத் தொடர்ந்து 20 மில்லியன் குவைத் தினார்கள் நிதி திரட்டப்பட்டது. அமெரிக்க டொலர்கள் மதிப்பில் 67 மில்லியன் ஆகும்.

வெளியுறவு அமைச்சர் நன்றி

இதுகுறித்து பேட்டி அளித்த வெளியுறவு அமைச்சர் ஷேக் சலேம் அப்துல்லா அல்-ஜாபர் அல்-சபா நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, 16 நாடுகள் அதிகாரப்பூர்வமாக விமானப் பாலங்களைத் தொடங்குவதாகவும், துருக்கிக்கு ஆதரவாக அவசர நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்தன.

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்! | Kuwait People Fund Raise Trukey Syria

அவற்றில் சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, லெபனான், அல்ஜீரியா, ஜோர்டான், பஹ்ரைன், லிபியா, துனிசியா, பாலஸ்தீனம், ஈராக், மவுரிதேனியா, சூடான் மற்றும் ஓமன் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

தற்போதைய நிலவரப்படி துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்! | Kuwait People Fund Raise Trukey Syria

@AFP

பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாரிய அளவில் நிதி திரட்டிய குவைத் மக்கள்! | Kuwait People Fund Raise Trukey Syria

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.