Kamalhaasan: கமலின் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட்டா ?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு விக்ரம் திரைப்படம் வெளியானது. அதற்கு முன்பு கமலின் மீது பல விமர்சனங்கள் இருந்தன. 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு கமலின் படம் வெளியாகவில்லை. மேலும் அவர் கமிட்டான இந்தியன் 2 பல பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டது

மேலும்
கமல்
அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியானார். எனவே இனி கமல் படங்களில் நடிக்கமாட்டார், அப்படி நடித்தாலும் அப்படம் வெற்றிபெறாது என ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர்.

AK62: விஜய் கதையில் நடிக்கிறாரா அஜித் ? புது ட்விஸ்ட்டா இருக்கே..!

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் தான் யார் என நிரூபித்தார் கமல். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

கூலிங் கிளாசுடன் மாஸாக வந்த மோகன்லால்!
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தை தன் முயற்சியினால் மீண்டும் துவங்கினார் கமல். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கமல் அடுத்ததாக வினோத்தின் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கமல் நடிப்பதாக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. குறிப்பாக கமல் இந்தியன் 2 படத்திற்கு பிறகு ரஞ்சித்தின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது.

ஏனென்றால் கமல் அடுத்ததாக வினோத்தின் இயக்கத்தில் தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது திடீரென ரஞ்சித்தின் இயக்கத்தில் அடுத்ததாக கமல் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.