புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி அனுமதி இல்லை: கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு கோரிக்கை


கனடாவின் கியூபெக் மாகாண நிர்வாகம் புகலிடக் கோரிக்கையாளர்களை இனி அனுமதிப்பதில்லை என அறிவித்துள்ள நிலையில், பிரதமர் ட்ரூடோவுக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை அந்த மாகாண முதல்வர் முன்வைத்துள்ளார்.

கியூபெக் மாகாண நிர்வாகம்

விதிகளை மீறி எல்லையை கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிற மாகாணங்களுக்கு அனுப்பப்படுவதை கியூபெக் மாகாண நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதைத் தடுக்க பிரதமர் ட்ரூடோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கியூபெக் மாகாண முதல்வர் François Legault கோரிக்கை விடுத்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி அனுமதி இல்லை: கனேடிய பிரதமர் ட்ரூடோவுக்கு கோரிக்கை | Trudeau Discourage Asylum Seekers Quebec Premier

2017ல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்ட ஒரு டுவிட்டர் தகவலே தற்போது பெரும்பாலான மக்கள் கனடாவில் புலம்பெயர காரணம் என தாம் கருதுவதாக கியூபெக் மாகாண முதல்வர் François Legault தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை அனுமதிக்கும் திட்டம்

மேலும் தற்போதைய சூழலில் கியூபெக் மாகாணத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுமதிக்கும் திட்டம் இல்லை எனவும், பிரதமர் ட்ரூடோ மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவிட்டு, கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர் வரவேண்டாம் என குறிப்பிட வேண்டும் என்றார்.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தகவலில், சிக்கலான சலை மார்கம் கியூபெக் மாகாணத்தில் நுழைய முயன்ற 380 பேர்களில் 8 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளதாகவும், எஞ்சியவர்களை வேறு மாகாணங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.