வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : புலம் பெயர்ந்த இந்தியரின் மகள் என்பதில் எனக்கு பெருமை என அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கிஹாலே கூறினார்.
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024-ல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே அறிவித்துள்ளார் . இந்நிலையில் சக கட்சி மூத்த நிர்வாகியான நிக்கி ஹாலே ,51 , அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என ஏற்கனவே அறிவித்தார்.
![]() |
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்றே்ற நிக்கி ஹாலே, தான் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரசாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியது, புலம் பெயர்ந்த இந்தியரின் மகள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். வாழ்வாதாரத்தை தேடி எனது பெற்றோர் இந்தியாவை விட்டு , இங்கு கரோலினா நகருக்கு வந்தனர். இந்நகரம் எங்களை மிகவும் நேசித்தது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement