கேப்டவுன்: பெண்கள் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தென் ஆப்ரிக்காவில் பெண்கள் டி.20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
15 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்திய தீப்தி ஷர்மா ஆட்ட நாயகியாக தேர்வு பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement