லண்டன், பிரிட்டனில் இரண்டு லட்சம் சாக்லேட்டுகளை திருடி லாரியில் அள்ளிச் சென்றவரை, போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், இரண்டு லட்சம் ‘காட்பரீஸ்’ சாக்லேட்டுகளை திருடியதற்காக ஜோபி பூல் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இங்குள்ள டெல்போர்ட் தொழிற்சாலையின் ஒரு பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த ஜோபி, அங்கிருந்த சாக்லேட்டுகளை லாரியில் அள்ளிச் சென்றார்.
திருடிய சிறிது நேரத்திலேயே ஜோபியை, போலீசார் லாரியுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காட்பரீஸ் சாக்லேட்டுகள் உட்பட பல வகையான சாக்லேட்டுகள் திருடப்பட்டதாகவும், இவற்றின் மதிப்பு 30.65 லட்சம் ரூபாய் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் தெரிவித்தனர். ஜோபியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement