Sex Education Series: இனி Maeve கிடையாது… மனமுடைந்த ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

Sex Education Series Update: வெப்-சீரிஸ் பார்ப்பது என்பது Gen-Z தலைமுறையினருக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிகளில் சந்தா கட்டிவிட்டு, மணிக்கணக்கா மாங்கு மாங்கு என்று வெப்-சீரிஸை பார்ப்பதை ஒரு தவமாக பலரும் செய்து வருகின்றனர். காதல், ஆக்ஷன், வரலாற்று நிகழ்வு, போதை மருந்து கடத்தல் போன்ற எண்ணற்ற வகையாறக்களில், இந்த வெப்-சீரிஸ்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. .

Breaking Bad, Game of Thrones, Peaky Blinders, Money Heist, The Dark, You என பரிட்சயப்பட்ட வெப்-சீரிஸ்கள் முதல் நீங்கள் கேள்வியேபட்டிராத தொடருக்கும் இங்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோலவே, How I Met Your Mother, The Office, Brookyln Nine-Nine, The Modern Family, The Big Bang Theory, Friends போன்ற நகைச்சுவை தொடர்களுக்கும் இந்தியாவில் பரந்துப்பட்ட அளவில் பார்வையாளர்கள் இருக்கின்றனர்.

இவற்றில் பெரும்பாலும் ஆங்கில தொடர்களாக இருந்தாலும், சில தமிழ், இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் காண கிடைக்கின்றன. மேலும், Sacred Games, Family Man, சமீபத்தில் வெளியான Farzi உள்ளிட்ட பல இந்திய வெப்-சீரிஸ்களும் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. 

தற்போதெல்லாம் வெப்-சீரிஸ் குறித்து பேசிதான், இளம்வயதினர் பலரும் டேட்டிங்கில் பேச்சை தொடங்கின்றனர் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தற்போதைய இளம் தலைமுறையினரிடம் வெப்-சீரிஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அதற்கு நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அதனால், இளம் தலைமுறையினர் அதனை விரும்புகிறார்கள்.

அந்த வகையில், நெட்பிளிக்ஸ் தயாரிப்பான ‘Sex Education’ வெப்-சீரிஸ் இளம் வயத்தினரின் விருப்பத்திற்குரிய ஒன்றாகும். அதாவது, இங்கிலாந்தின் உயர்நிலை பள்ளியான ‘Moordale’ பள்ளி மாணவர்களின் கதையே ‘Sex Education’தொடர். 16 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களான கதைமாந்தர்களிடம் எழும் பாலியல் ரீதியான பிரச்னைகள்,  பாலியல் சார்ந்த கேள்விகள், குழப்பங்கள், பாலியல் தேர்வுகள், பாலின அடையாளங்கள், பாலின விழிப்புணர்வுகள் ஆகியவற்றை இந்த ‘Sex Education’தொடர் உலகம் முழுவதும் உரையாடலை நிகழ்த்தியுள்ளது. 

‘Sex Education’தொடர் நடத்திய இந்த பரந்துப்பட்ட உரையாடல் பலருக்கும் பாலியல் குறித்தான தெளிவை ஏற்படுத்தியதாகவும், அதுகுறித்த பார்வையையும் மாற்றியதாகவும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், அந்த ‘Sex Education’ தொடரின் முக்கிய கதாபாத்திரம், Maeve. பெற்றோர் ஆதரவின்றி, ஊரால் ஒதுக்கப்பட்ட பகுதியில் வாழும் Maeve, சுதந்திரமாக, ஆழ்ந்து சிந்திக்கூடிய மாணவி. ஆங்கில இலக்கியத்தில் பித்து பிடித்த அந்த கதாபாத்திரம்தான், அந்த சீரிஸின் ரசிகர்களையும் பித்து பிடிக்க வைத்தது. 

அதற்கு முக்கிய காரணம், Maeve Willey கதாபாத்திரத்தில் நடித்த எம்மா மேக்கி (Emma Mackey) என்ற 27 வயது நடிகைதான். இந்த சீரிஸில் பள்ளி மாணவிதான் என்றாலும், எம்மா தனது வசீகரமான நடிப்பாலும், அலட்டல் இல்லாத உடல்மொழியாலும் பல அற்புதங்களை இந்த சீரிஸில் நிகழ்த்திக்காட்டியுள்ளார் என்றே கூற வேண்டும். இதுவரை மூன்று சீசன்களாக, முப்பது எபிசோட்கள் வெளிவந்துள்ள நிலையில், நான்காவது சீசனின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

 

நான்காவது சீசன் இந்தாண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் நான்காவது சீசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் நான்காவது சீசனுக்கு பின், எம்மா மிக்கி, Sex Education தொடரில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். 

இதை அவர் லண்டனில் நேற்று நடைபெற்ற BAFTA Rising Star Award நிகழ்ச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் Sex Education ஐந்தாவது சீசனில் நீங்கள் இருப்பீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு,”எது ஐந்தாவது சீசனா…! கடந்த வாரம்தான் சீசன் நான்கின் படப்பிடிப்பை முடித்தேன்” என கூறி சிரிக்கத் தொடங்கினார். மேலும் தொடர்ந்த அவர்,”இல்லை, ஐந்தாவது சீசனில் இருக்க மாட்டேன். Maeve கதாபாத்திரத்திற்கு நான் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்” என்றார். இதன்மூலம், அவர் ஐந்தாவது சீசனில் நடிக்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், எம்மா மேக்கிக்கு அந்த விழாவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

எம்மா மட்டுமின்றி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒருவரும் அந்த தொடரில் இருந்து விலகுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அது வேறு யாரும் இல்லை,  Otis நண்பரான Eric கதாபாத்திரத்தில் நடித்த Ncuti Gatwa என்பவர்தான். அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்ததார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ncuti Gatwa (@ncutigatwa)

அப்படியென்றால், இந்தாண்டு வெளியாகும் நான்காவது சீசனோடு Maeve, Eric கதாபாத்திரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில், வேறு நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் வாய்ப்புள்ளது. எனினும், Sex Education நான்காவது சீசனோடு நிறைவு பெற்றுவிடும், ஐந்தாவது சீசனே இருக்காது என்றுதான் அதிகமானோர் கருதிகின்றனர். இந்த நடிகர்களின் கூற்று அதற்கு வலுசேர்க்கிறது என்றே கூறவேண்டும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.