வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எரிசக்தி உற்பத்தியில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பான விளக்கங்களை அளிக்க இன்று(பிப்.,23) முதல் மார்ச் 11ம் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளை மத்திய அரசு நடத்த உள்ளது.

இந்நிலையில், பசுமை வளர்ச்சி குறித்து பட்ஜெட்டுக்கு பிந்தைய முதல் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: 2023ம் ஆண்டு பட்ஜெட் உலக அளவில் பசுமை எரிசக்தி சந்தையில் இந்தியா முன்னணியாக இருக்க துணைப்புரியும். எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அனைத்து பங்குதாரர்களையும் நான் அழைக்கிறேன்.
உயிரி எரிபொருள் தயாரிப்பு:
வாகன ‘ஸ்கிராப்பிங் கொள்கை’ இந்தியாவின் பசுமை வளர்ச்சிக்கு உதவும். இந்த பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கு பாதுகாப்புக்கான வாய்ப்பாகும். பட்ஜெட் கொள்கைகளை செயல்படுத்த விரைவாக செயல்பட வேண்டும். ‘ கோபர்தன்’ திட்டமானது, கிராமத் தூய்மையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் கால்நடைகள் மற்றும் கரிமக் கழிவுப் பொருட்களிலிருந்து பொருளாதாரம் மற்றும் ஆற்றலை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது. கோபர்தன் திட்டம் இந்தியாவின் உயிரி எரிபொருள் தயாரிப்பில் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த பட்ஜெட்டில், இத்திட்டத்தின் கீழ் 500 புதிய ஆலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை வளர்ச்சி:
இந்தியாவின் சூரிய, காற்று மற்றும் உயிர்வாயு ஆற்றல் உள்ளிட்டவை தயாரிக்கும் பணியில் சிறப்பாக உள்ளது. விவசாயிகள் சோலார் பம்புகள் மற்றும் சோலார் மின் உபகரணங்கள் பயன்படுத்த உதவுவதறாக 2019ஆம் ஆண்டில் மத்திய அரசு ‛பிரதமர் குசம்’ திட்டம் சூரிய ஒளி உற்பத்தியை ஊக்குவிக்கும் மேற்கூரை சோலார் திட்டம், நிலக்கரி வாயுவாக்கம், ஈ.வி. பேட்டரி சேமிப்பு போன்ற திட்டங்களுடன் பசுமை வளர்ச்சியின் திசையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றத்திற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்துடன் முன்னேறுவது என மூன்று தூண்களை இந்தியா அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயம், கிராமங்களின் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் போன்ற பல தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement