மதுரை: நில அளவை களப்பணியாளர்கள் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மண்டலங்களை சேந்த நிழலவை களப்பணியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
நிலஅளவை களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். நிலா அளவை அலுவலர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புற ஆதார ஒப்பந்த நிலையில் அந்த அலுவலகர்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும். வருவாய்துறை நடைமுறையின் சார்பில் நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி உண்ணாவிரப்போராட்டம் நடைபெற்றுவருகிறது.