இளைஞர்கள், அவர்கள் வருங்கால நலனுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் பகுதியில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி, அவையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையில் ஏற்பட்ட தொடர் அமளியால் முதல் பருவ கூட்டத்தொடர் வருகிற மார்ச் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதன்முறையாக இணையதளம் வழியே நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுவார் என கடந்த 2 நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இந்த உரையின்போது, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்ற பசுமை எரிசக்தி வளர்ச்சியுடன் தொடர்புடைய நோக்கங்களில் கவனம் செலுத்துவது பற்றிய முக்கிய விசயங்கள் இடம்பெறும் என்றும் அப்போது பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்ட தொடக்க விசயங்களை திறம்பட அமல்படுத்துவதற்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன என மத்திய அரசு தெரிவித்தது.

நடப்பு 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு பின்னான, வெபினார்கள் எனப்படும் இணையதளம் வழியேயான கருத்தரங்க நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளன. இதன்படி, 12 தொடராக நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெறுகிறது.

அதில், பட்ஜெட்டில் இடம்பெற்ற 7 முக்கிய அம்சங்களில் ஒன்றான பசுமை எரிசக்தி வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசினார். அவர் கூறும்போது, இந்தியாவின் சூரிய சக்தி, காற்று மற்றும் எரிவாயு சக்தியை மதிப்பிட்டு அவர் பேசினார். அவை, ஒரு தங்க சுரங்கம் அல்லது எண்ணெய் வயலுக்கு இணையானது என்ற வகையில் பேசினார்.

இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆனது, அதிக அளவிலான பசுமை வேலைவாய்ப்புகளை பெரும் அளவில் உருவாக்க வல்லது. பட்ஜெட் கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூட்டாக மற்றும் விரைவாக நாம் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் பேசினார்.

இந்த மத்திய பட்ஜெட்டானது, பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பரவி கிடக்கிற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் திட்ட தொடக்கங்களை வருங்காலத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை கொண்டு உள்ளது என்றும் அவர் கூறினார். பசுமை எரிசக்தி தொடர்புடைய பட்ஜெட் பிரிவுகள், அடுத்த தலைமுறையின் பிரகாசமான வருங்காலத்திற்கான அடிக்கல்லுக்கான ஒரு வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடந்து வரும் கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று பேசும்போது, புதிய தொழில் நுட்பம் ஆனது, ஆன்மீகம் சார்ந்த வகுப்பறைகளை கட்டியெழுப்ப உதவுகிறது. இந்த பட்ஜெட்டானது, நடைமுறையில் உள்ள மற்றும் தொழில் சார்ந்த கல்வி திட்டத்திற்கான அடித்தளம் அமைக்கும் வகையில், அதில் கவனம் செலுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

இந்த அமுத கால பட்ஜெட்டில், இளைஞர்கள் மற்றும் அவர்களது வருங்காலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நமது கல்வி பிரிவானது மாற்ற முடியாத அளவுக்கு இறுகி போய் இருந்தது.

அதனை மாற்றுவதற்கு நாங்கள் முயன்றோம். கல்வியை மறுசீரமைக்கும் பணிகளை செய்து, வருகிற நாட்களில் இளைஞர்களின் திறன்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில் அதனை மேம்படுத்தினோம் என்று கூறியுள்ளார்.

இதற்காக ஆசிரியர்களிடம் இருந்து நிறைய ஆதரவு கிடைக்க பெற்றோம். அதனால், நமது கல்வி பிரிவை சீர்திருத்தம் செய்வதற்கு அரசுக்கு ஊக்கம் கிடைத்தது. ஆசிரியங்களின் பங்கானது வகுப்பறையுடன் முடிந்து விடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.