''விஜய் பற்றி அவரிடமே கேளுங்கள்" – எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்

இன்றைக்கு தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். அவரை இந்த சினிமா உலகிற்கு அழைத்து வந்தவர் அவருடைய தந்தை மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் ஒரு கட்டத்தில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்வத்தில் ஒரு சில செயல்கள் செய்துள்ளார். அதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாததால் தந்தை, மகன் உறவில் விரிசல் ஏற்பட்டது .

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் கோயிலுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிந்ததும், ஏராளமான செய்தியாளர்கள் கோயிலின் முன்பு குவிந்துள்ளனர்.

அப்போது செய்தியாளர் ஒருவர், விஜய் அரசியலுக்கு வருவாரா எனக் கேட்டுள்ளார்? உடனே அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் குறித்த கேள்விகளை அவரிடமே கேளுங்கள் என ஒரு வரியில் கூறியுள்ளார். அப்பா மகன் இடையே இன்னும் மனஸ்தாபம் தீரவில்லை என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.