சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி காய்க்க,6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. 2023ம் ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், , “நோன்பு நோற்கும் […]