நீங்கள் ஏர்டெல் பயனர்களாக இருந்து, வருடாந்திர மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் எந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிற குழப்பம் இருக்கும். ஏனெனில் வருடாந்திர திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. மாதாந்திர திட்டங்கள் மலிவானவை. ஆனால் முழு வருடத்தின் செல்லுபடியை கணக்கிடும் போது, வருடாந்திர திட்டம் நல்ல தேர்வு. மேலும், வருடாந்திர திட்ட ரீசார்ஜ் மாதாந்திர திட்டத்தை விட குறைவாக செலவாகும். வாருங்கள் அத்தகைய ரீசார்ஜ் திட்டத்தை பற்றிய முழு தகவலை இங்கே அறிந்துக்கொள்வோம்.
ஏர்டெல் 2999 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.2999 திட்டம் 365 நாட்கள் அதாவது ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் மாதச் செலவு சுமார் 250 ரூபாய். இருப்பினும், நன்மைகளைப் பற்றி நாம் பேசுனால், ஏர்டெல்லின் ரூ.265 மாதத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, ரூ.250 வருடாந்திரத் திட்டமானது அதிக டேட்டா மற்றும் பல கூடுதல் அம்சங்களை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ.2999 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட் காலிங் வசதியும் உள்ளது. இது தவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.265 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.265 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஆப் பிரத்தியேக 2 ஜிபி டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது. இது தவிர, HelloTunes மற்றும் Wynk Music இன் இலவச சந்தா வழங்கப்படுகிறது. அழைப்பிற்கு அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்டிடி நிமிடங்கள் வழங்கப்படும். இதனுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.
எந்த திட்டம் சிறந்தது
ஏர்டெல்லின் வருடாந்திர திட்டமான ரூ.2999 உடன் ஒப்பிடும்போது, ரூ.265 மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் சுமார் 11 மாதங்கள் செல்லுபடியாகும். மேலும், 180 ரூபாய் அதிகம். அதாவது, மாதாந்திர திட்டத்தில் ரூ.180 அதிகமாக செலுத்திய பிறகும், ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதில் குறைவான பலன்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.