Lava Blaze 2: சீன ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட வரும் மலிவு விலை இந்திய ஸ்மார்ட்போன்

இந்தியா உலக அளவில் ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்தியாவில் Xiaomi மற்றும் OPPO போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் காலூன்றுவது மிகவும் கடினமாகி வருகிறது. எனினும், லாவா இந்த போட்டியை கைவிடத் தயாராக இல்லை. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

சமீபத்தில் லாவா நிறுவனம் லாவா பிளேஸ் 5ஜி -ஐ (Lava Blaze 5G) அறிமுகப்படுத்தியது. இது நேர்த்தியான அம்சங்களைக் கொண்டிருந்தது. மேலும் இது மிகக் குறைந்த விலையில் கிடைத்தது. இப்போது லாவா நிறுவனம் லாவா பிளேஸின் அடுத்த பதிப்பை கொண்டு வரப்போகிறது. அதற்கு லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2 ) என்று பெயரிடப்படும்.

Lava Blaze 2: இந்தியாவில் இதன் விலை என்ன?

டிப்ஸ்டர் முகுல் சர்மா போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். லாவா பிளேஸ் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கைபேசியின் விலை ரூ.10,000க்குள் இருக்கும் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். பிளேஸ் 5ஜி- யின் விலை ரூ.10,999 என்பது குறிப்பிடத்தக்கது. 

Lava Blaze 2: வடிவமைப்பு

லாவா பிளேஸ் 2 இன் லைவ் இமேஜும் வெளிவந்துள்ளது. படத்தில் காணப்படுவது போல, ஸ்மார்ட்போனில் கேமரா சென்சார்கள் அடங்கிய இரண்டு பெரிய ரிங்குகளுடன் ஒரு பிளாட் பேக் உள்ளது. பின்புறம் வெளிப்படையாக கண்ணாடியால் ஆனது. இந்த ஸ்மார்ட்போனில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் ஒரு பவர் பட்டன் கொண்ட வலது விளிம்புடன் ஃப்ளேட் சைட் உள்ளது. இது கைரேகை சென்சாருடன் (ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன்) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சாதனத்தின் முன்புறம் படத்தில் காட்டப்படவில்லை. ஆனால் தடிமனான பெசல்கள் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றை நாம் எதிர்பார்க்கலாம்.

Lava Blaze 2: விவரக்குறிப்புகள்

லாவா பிளேஸ் 2 யூனிசாக் டி616 செயலி மூலம் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் முகுல் ஷர்மா கூறுகிறார். 12nm செயலியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன், ஒரு நுழைவு-நிலை ஆக்டா-கோர் SoC ஆகும். இதில் இரண்டு வேகமான ARM கார்டெக்ஸ் A75 கோர் 2 GHz மற்றும் ஆறு ஆற்றல் திறன் கொண்ட ARM Cortex A55 கோர்கள் 1.8 GHz வரை க்ளாக் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் மீதமுள்ள விவரக்குறிப்புகள் இன்னும் அறியப்படவில்லை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.