Meena, Rajinikanth: 'சப்பியா பன்னு மாதிரி இருப்பா'.. ரஜினியால் வெட்கப்பட்டு சிரித்த மீனா!

மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தானும் வெட்கப்பட்டதோடு மீனாவையும் வெட்கப்பட வைத்தார்.

மீனாநடிகை மீனா 1982 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 45க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மீனா.
​ Keerthy Suresh: கீர்த்தி சுரேஷா இது? மாடர்ன் லுக்கில் வேற லெவல்!​
மீனா 40தற்போதும் சினிமா, சின்னத்திரை என பிஸியாக உள்ளார். இந்நிலையில் நடிகை மீனா சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்ததை பிஹைண்ட் வுட்ஸ் யூட்யூப் சேனல் மீனா 40 என கொண்டாடியது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், பிரசன்னா, போனி கபூர், தேவா, சதீஷ், பாக்கியராஜ், ஜீவா, ராதிகா, தேவயானி, குஷ்பு, ரோஜா, சங்கவி, பிருந்தா, ஸ்ரீதேவி விஜயகுமார், பூர்ணிமா பாக்கியராஜ் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
​ Pavithra Lokesh: எல்லாம் நரேஷின் 1500 கோடி ரூபாய் சொத்துக்காகதான்… பவித்ரா லோகேஷின் முதல் கணவர் பகீர்!​
சப்பியா பன்னு மாதிரிஅப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் நடிகை மீனா சிறு வயதில் சப்பியா கன்னமெல்லாம் பன்னு போல இருப்பா என கூற அவரே வெட்கப்பட்டு சிரித்தார். இதனைக் கேட்ட மீனாவும் வெட்கத்தில் முகத்தை மூடி சிரித்தார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், யார் கண்ணு பட்டுச்சோ, இப்படி ஒரு சோக நிகழ்வு நடந்துவிட்டது என மீனாவின் கணவர் வித்யா சாகர் மரணம் குறித்தும் பேசி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த்.​ Suriya 42: நடிகையை அடிக்கடி கேரவனுக்குள் அழைத்து செல்லும் சூர்யா? பகீர் கிளப்பும் பிரபலம்!​
ரஜினிக்கு ஜோடிநடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியின் குட்டி ரசிகையாக நடித்திருப்பார் மீனா. எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருப்பார். பின்னர் பருவ மங்கையானதும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. வீரா, எஜமான், முத்து ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா. இந்த மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்ஸ்.
​ Actor: ஓவர் ஆட்டங் காட்டும் விபூதி நடிகர்… ஓரங்கட்ட ரெடியாகும் கோடம்பாக்கம்!​
அண்ணாத்தகடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார் மீனா. நடிகை மீனாவுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் ஆரம்பத்தில் இருந்தே அப்பா – மகள் போன்ற ஒரு உறவு உள்ளது. மீனாவின் கணவர் மரணம் குறித்து அறிந்ததும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் மீனாவுக்கும் ஆறுதல் கூறினார். ரஜினியை பார்த்ததுமே அங்கிள் என மீனா கதறியதாக அப்போது தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
​ மீனா நிலைமை யாருக்கும் வரக்கூடாது!​
Rajinikanth Meena

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.