இந்த 6 மலையாள திரில்லர் திரைப்படங்களை மறக்காம பாத்துருங்க!

மலையாள மொழிப் படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, மலையாள மொழியில் வெளியாகும் ரொமான்டிக் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு இருக்கின்றது.  அதிலும் குறிப்பாக த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களுக்கு அனைத்து மொழி ரசிகர்களுக்குமிடையே வரவேற்பு உள்ளது.  தற்போது நீங்கள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய 6 மலையாள திரைப்படங்களை பற்றி பார்ப்போம், இந்த படங்கள் ஓடிடி தலங்களிலேயே பார்த்து ரசிக்கலாம்.
 
இரட்டா / Iratta:

ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் எழுதி இயக்கிய இந்த மலையாள த்ரில்லர் திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், அஞ்சலி, ஸ்ரீகாந்த் முரளி, ஆர்யா சலீம் போன்ற பலர் நடித்துள்ளனர்.  வாகமன் காவல் நிலையத்திலுள்ள ஒரு போலீஸ் அதிகாரி கொலைக்கு காரணமான குற்றவாளியை கண்டுபிடிக்க தொடங்கப்படும் விசாரணை குறித்து இந்த படத்தின் கதை நகர்கிறது, இப்படம் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை தரும் விதமாக அமைந்துள்ளது.  இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் பார்க்கலாம். 

தி டீச்சர் / The Teacher:

விவேக் இயக்கத்தில் அமலா பால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் தான் ‘தி டீச்சர்’.  இப்படத்தில் ஹக்கீம் ஷா, மஞ்சு பிள்ளை, நந்து, அனுமோல், செம்பன் வினோத் ஜோஸ் போன்ற பலர் நடித்திருந்தனர்.  அமலா பால் இதில் இயல்பான வாழ்க்கை வாழும் ஒரு உடற்கல்வி ஆசிரியராக நடித்திருந்தார்.  பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியவர்களையும், மற்ற குழந்தைகளை சீரழிக்கும் நபர்களை எப்படி கண்டறிகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.  பார்வையாளர்களுக்கு த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் பார்க்கலாம்.

கூமான் / Kooman:

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பிரபல நடிகர்கள் ஆசிப் அலி, ஹன்னா ரெஜி கோஷி, ஜாபர் இடுக்கி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ஒரு போலீஸ் அதிகாரி கேரளா-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார், அங்கு அவருக்கு சில அசாதாரண நிகழ்வுகள் நடக்கிறது மற்றும் காவல் நிலையத்திலும் சில அசாதாரண நிகழ்வுகளை அவர் சந்திக்கத் தொடங்குவதை இந்த படம் காண்பிக்கிறது.  இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் பார்க்கலாம்.

ஜன கண மன / Jana Gana Mana:

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், மம்மூட்டி, சுராஜ் வெஞ்சாரமூடு, மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா ஆகியோரது நடிப்பில் இந்த படம் வெளியானது.  கல்லூரி பேராசிரியை ஒருவரின் கொடூர கொலை மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.  மறுபுறம் இந்த சோகமான நிகழ்வை போலீசார் ஒருவர் விசாரிக்க, வழக்கறிஞர் ஒருவர் நீதியை நிலைநாட்ட போராடுகிறார்.  இறுதியில் நீதி கிடைத்ததா என்பது தான் படத்தின் கதை.  இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளத்தில் பார்க்கலாம்.

படா / Pada:

கமல் கே.எம் எழுதி இயக்கிய இந்த த்ரில்லர் படத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணன், கனி குஸ்ருதி, ஜோஜு ஜார்ஜ், விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தில் நடிகர் மம்முட்டி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.  1996-ல் அமைக்கப்பட்ட, நான்கு பழங்குடியினர் தங்கள் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் மசோதாவுக்கு எதிராக போராடுவதற்காக கலெக்டர் அலுவலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவரை பிணைக் கைதியாக பிடித்து வைக்கின்றனர்.  இதில் இறுதியில் பழங்குடியினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.  இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளத்தில் பார்க்கலாம்.

ரோர்சாச் / Rorschach:

ரோர்சாக் நிசாம் பஷீர் இயக்கிய இந்த நியோ-நோயர் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் மம்முட்டி, கிரேஸ் ஆண்டனி, ஆசிப் அலி, பிரியம்வதா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  கடந்த காலத்தில் பல கசப்பான சம்பவங்களை மனிதருக்கு அநீதி இழைத்த நபரைத் தேடுவதற்கும், சரியான முறையில் அதற்கு தக்க தண்டனை வழங்கவும் போராடுவதை பற்றி படத்தின் கதை நகர்கிறது.  இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இயங்குதளத்தில் பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.