அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்!

அதிமுகவில் ஜூலை 11, 2022 பொதுக்குழு வழக்கில் தீராத பிரச்சினையாக தொடர்ந்து வந்தது. இது செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் வரும் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த எடப்பாடி தரப்பு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த

தரப்பு, பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்

இதன் மீதான விசாரணை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதிடுகையில், தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அங்கீகரித்து வருகிறது. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர். இதனால் அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை உருவாகியுள்ளது.

எடப்பாடி தரப்பு வாதம்

வேட்புமனு தாக்கல் இன்று மாலையே நிறைவு பெற்றதாக கூறி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கலாம். இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில்

தரப்பு வாதிடுகையில், 1.50 கோடி உறுப்பினர்களில் ஓபிஎஸ்க்கு ஒரு சதவீத கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.

நீதிமன்றம் தலையீடு

ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பாளர் தேர்தல்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம். அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோலத் தான் வார இறுதியில் 3 நாட்கள் நடத்தப்பட்டன.

தடை கோர முடியாது

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. கட்சிக்கு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டால் தான் கட்சி பிரச்சினைகளை கையாள முடியும். அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமை தான் வேண்டும் என வலியுறுத்தினர்.

பொதுக்குழு அதிகாரம்

ஜூலை 11 பொதுக்குழுவில் 2,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 2,100க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்சியில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பாக விளங்குகிறது. கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறும் அவர்கள், இப்போது ஏன் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறார்கள்?

உட்கட்சி விவகாரம்

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை பார்த்தும், ஓபிஎஸ் தரப்பினர் யதார்த்த நிலையை உணரவில்லை. கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்படும் என விதிகள் உள்ளன. உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என மறுத்த பல நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன.

கட்சி விதிகளில் திருத்தம்

ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடர எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. அதிமுகவில் ஒரு சதவிகித ஆதரவு கூட ஓபிஎஸ்க்கு இல்லை. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு 4 முறை உயர் நீதிமன்ற தனி நீதிபதியிடமும், 3 முறை அமர்வு நீதிபதிகளிடமும் முறையிட்டு தோல்வி அடைந்து சூழல் மாறியதால் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இது அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது என்ற வாதம் தவறானது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு, மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் கொண்டுவரக் கூடாது என எந்த காரணத்தையும் ஓபிஎஸ் தரப்பில் சொல்லவில்லை என்று எடப்பாடி தரப்பு வாதிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.