2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி!

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது .

இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையிலிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும்   2-வது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி! | India Losses Against Australia 10 Wickets 2Odi@cricbuzz

டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி! | India Losses Against Australia 10 Wickets 2Odi@cricbuzz

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர்.

சரிந்த விக்கெட்டுகள்

இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார்.

இந்திய அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி! | India Losses Against Australia 10 Wickets 2Odi@cricbuzz

இதில் கேப்டன் ரோகித் 13 ஓட்டத்திலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தைப் போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய அக்சர் பட்டேல் 29 ஓட்டங்களை எடுத்தார் .

அடுத்து களம் இறங்கிய ராகுல் , ஹர்த்திக் பாண்ட்யா , ஜடேஜா, குல்தீப் , ஷமி ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி! | India Losses Against Australia 10 Wickets 2Odi@cricbuzz

இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அவுஸ்திரேலியா அபார வெற்றி

இதையடுத்து 118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி! | India Losses Against Australia 10 Wickets 2Odi@cricbuzz

117 ஓட்டங்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிட்சல் மார்ஷ் 62 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 46 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.